இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் சேவைகளை வழங்குவதற்கு “Starlink” நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அறிவித்தார்.
உரிய வகையில் பொதுமக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னரே இந்த அனுமதி வழங்கபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்