வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் நிறுவப்பட்டிருந்த சோதனைச் சாவடியில் நிறுத்த உத்தரவிடப்பட்ட கார் பாதசாரி கடவையில் நடந்து சென்ற பலர் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பெண் குழந்தை உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
காலாவதியான பதிவு எண் கொண்ட காரை அங்கு நிறுத்த உத்தரவிட்டபோது, அது நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகள் அதைச் சென்றடைவதற்குள், சாரதி மீண்டும் வாகனத்தை இயக்கி பாதசாரிகளை விபத்திற்குள்ளாகி சென்றுள்ளார். விபத்தையடுத்து சாரதி தப்பியோடிய நிலையில், தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.









