கொழும்பு – வெல்லம்பிட்டிய லாஞ்சியாவத்த பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு பல வீடுகளில் தீ பரவியுள்ளது.
தீயை அணைக்க 3 தீ அணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தற்போது தீ முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தீ அணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் எவ்வித உயிர் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.