-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வெங்கடேஷ்வர வரதராஜப் பெருமாள் தேவஸ்தான மஹோற்சவத்தின் முன்றாம் நாள் திருவிழாவான வெள்ளிக் கருடசேவை திருவிழா நேற்றையதினம் சனிக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இவ் மஹோற்சவத்தினை ஆலய பிரதம குரு செ.ரமணீதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் நடாத்திவைத்தனர்.
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வர வரதராஜப் பெருமாள் சீதேவி, பூமாதேவிக்கு ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. பின்னர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேஷ்வர வரதராஜப் பெருமாள் கருடசேவையில் வீற்றிருந்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பல இடங்களில் வருகைதந்த பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்