எல்ல கும்பல்வெல வீதியில் நேற்று புதன் கிழமை பிற்பகல் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பிரஜை காயமடைந்துள்ளார்.
28 வயதுடைய நெதர்லாந்து யுவதியே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
எல்ல கும்பல்வெல வீதியில் தனது காதலனுடன் பயணித்த வேளையில் கிணலன் கோவிலுக்கு அருகில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பெண்ணே முச்சக்கர வண்டியை செலுத்தியதாகவும் பெண்ணின் காதலனுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்