மாதம்பை – குளியாப்பிட்டிய வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் தாய் பலத்த காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தும்மலசூரிய – வீரகொடியானை பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு ஆண் பிள்ளைகளாவர்.
காயமடைந்த தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










