கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக, என்.மணிவண்ணன் மற்றும் பிரதி தலைமைச் செயலாளராக செல்வி.எல்.பிரசாந்தன் ஆகியோர் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நியமனங்களை, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து, ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக முன்னர் கடமையாற்றியவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, என்.மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.










