பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் ஏழு வைத்தியசாலை ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் வைத்தியசாலை சமையலறையில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஏழு ஊழியர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்பினால் வைத்தியசாலை கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வெடிப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










