-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு புணானை விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலை கழகத்தின் துவக்க விழா நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை பல்கலைக் கழகத்தின் ஸ்த்தாபகரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லாவின் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களுக்கான பல்கலைக் கழக நுழைவு அணுமதி பத்திரம் சம்பிரதாய பூர்வமாக கலாநிதி எம்.எல.எ.எம்.கிஸ்புல்லாவின் ஆசியுடன் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தினசேகர, எஸ்.எல்.ரி.சீ(SLTC ) பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் வேரஞ்சன் கருணாரத்தின, எஸ்.எல்.ரி.சீ (SLTC ) யின் ஐ.ரி(IT) பீடாதிபதி கலாநிதி சம்பத்டிகல, எஸ்.எல்.ரி.சீ யின் தலைமை அதிகாரி கலாநிதி அஸ்மின், செலாஸ் கொம் நிறுவன முன்னாள் தவிசாளர் ஆசிக் முகமட் அலி, ஆகியோர்கள் கொளரவ அதிதிகளாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கப்படும் விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக் கழகத்தின் எதிர்கால கல்வி தொடர்பான விடயங்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சர்வதேச பல்கலைக் கழக தரத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆலோசனைகளை முன்வைத்து உரையாற்றினார்கள்.
முதலாம் கட்ட அனுமதியில் நாடு பூராகவும் இருந்து மூவினத்தைச் சேர்ந்த 700 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலும் 3000 பேருக்கு அனுமதி உள்ளதாகவும் நூலகம், தங்குமிட வசதிகள் பொழுது போக்கு, சுகாதாரம், உடற்பயிற்சி, மருத்துவம் என பல்வேறு வசதிகள் கொண்டமைந்த சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக் கழகமாகும்.

