வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படக் கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி குறித்த பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 -70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மறு அறிவித்தல் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கற்பிட்டி, கொழும்பு, காலி தொடக்கம் மாத்தறை வரையிலான பகுதிகளில் கடல் அலை கரையை வந்தடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்