பத்தாயிரம் ரூபா தருவதாக கூறி சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில், நீண்ட காலமாக இவ்வாறு ஓரினச்சேர்க்கை செயற்பாடு இடம்பெற்று வந்துள்ளது.
இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள், குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, அங்கு சென்ற இரு சிறுவர்களையும் வரவேற்ற வர்த்தகர், ஓரினச்சேர்க்கை செயற்பாட்டிற்காக பத்தாயிரம் ரூபா தருவதாக பேரம் பேசியுள்ளார்.
பின்னர் சிறுவர்களில் ஒருவரை தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளார். இதன்போது, மற்றைய சிறுவன் அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை வர்த்தகரின் கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
பின்னர் பேரம் பேசியபடி பத்தாயிரம் ரூபாவை வர்த்தகர் வழங்கவில்லை. அதனால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியினை பதிவு செய்த வர்த்தகரின் கைத்தொலைபேசியினை இரு சிறுவர்களும் வலுக்கட்டாயமாக பறித்து எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன் பேரம் பேசிய பத்தாயிரம் ரூபா பணத்தை தருமாறு கோரி வர்த்தகரை குறித்த சிறுவர்கள் மிரட்டி அச்சுறுத்தியதுடன், தரவேண்டிய பணத்தை தரவில்லை என்றால் குறித்த காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டு விடுவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, திருமணமான 56 வயதான வர்த்தகர், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கடந்த மே 06 ஆம் திகதி சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தார்.
குறித்த முறைப்பாட்டில், தனது வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் மேசையில் இருந்த தனது விலையுயர்ந்த கைத்தொலைபேசியினை திருடிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
வர்த்தகர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது, அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியில் வைத்து 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களையும் கைது செய்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஓரினச்சேர்க்கை தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் பொலிஸாருக்கு தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, கடந்த மே 21 ஆந் திகதி குறித்த வழக்கானது கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த காணொளியை இரு சிறுவர்கள் சார்பாக ஆஜரான எதிர்தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு சமர்ப்பித்த நிலையில், காணொளியை வழக்கின் சான்றுப்பொருளாக எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிவான், கைதான இரு சிறுவர்களில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறும், பிரதான சந்தேக நபரான வர்த்தகரை கைது செய்யுமாறும் கட்டளை பிறப்பித்தார்.
இதன் போது, பிரதான சந்தேக நபரான வர்த்தகர் தலைமறைவாகி இருந்ததுடன், குறித்த வழக்கும் மே மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்காக மறுதவணை இடப்பட்டிருந்தது.
அதன்படி குறித்த வழக்கானது நேற்று திங்கட்கிழமை, கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது தலைமறைவாகி இருந்த வர்த்தகர் 5 சட்டத்தரணிகளுடன் மன்றில் சரணடைந்தார்.
சம்பவங்களை விசாரித்த நீதவான், பிரதான சந்தேகநபரான வர்த்தகரை எதிர்வரும் யூன் மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் வழிகாட்டுதலின், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான, பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம் முஸ்தபா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .