அம்பாறை – கல்முனை வீதியில் மாவடிப்பள்ளி பெரியபள்ளி வாசலுக்கு முன்பாக இன்று காலை 7 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் பயணித்துக் கொண்டிருந்த சிறுமியின் மீது தனியார் போக்குவரத்து பேருந்து மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
சம்மாந்துறையை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு விபத்தில் மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்து நடந்தவுடன் குறித்த பேருந்தின் சாரதி விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் தற்போது பேருந்தின் சாரதி காரைதீவு பொலிஸில் சரணடைந்துள்ளார்.
காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்