-வவுனியா நிருபர்-
வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் விவசாய அமைப்புக்கான கட்டிடத்தினை வடக்கு மாகாண ஆளுனர் பீ.எச்.எம்.சாள்ஸ் நேற்று திங்கட்கிழமை திறந்து வைத்தார்.
குறித்த கட்டிடம் வடமாகாண ஆளுனரால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு விவசாய சங்கத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. குறித்த நிகழ்வின் நினைவாக மரநடுகையும் இடம்பெற்றது.
அத்துடன், சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் நிதி உதவியில் ஈரப்பெரியகுளம் விவசாயிகளுக்கு 2000 ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்து, பயறு, கௌப்பி ஆகிய தானிய செய்கை மேற்கொள்வதற்கான உதவித் திட்டம் வழங்குவதற்கான செயற்பாடுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சிங்கப்பூர் பௌத்த சங்கத்தினர், மதத்தலைவர்கள், சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை மாணவர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
