அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனம் புத்தளம் – கருவலகஸ்வௌ பகுதியில் இன்று சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
நாடாளுமன்ற உறுப்பினர் புத்தளம் நோக்கிச் சென்ற போது, அவர் பயணித்த வாகனத்திற்கு முன்பாக திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று பிரவேசித்துள்ளது.
இதன்போது, விபத்தைத் தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்தை, அதன் சாரதி கட்டுப்படுத்த முற்பட்ட போது, அது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகக் பொலிஸார் தெரிவித்தனர்
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்