ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்

ரஷ்யாவின் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட எண்ணெய் இறக்குமதியை தடுக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இணங்கியுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதானி சார்ல்ஸ் மிச்செல் அறிவித்துள்ளார்.

பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டில் குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இணக்கப்பாடு ரஷ்ய போருக்கான பாரிய நிதி ஆதாரத்தை தடுக்கும்.

அத்துடன், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா மீதான அதிகபட்ச அழுத்தத்தை ஏற்படுத்தும், எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதானி சார்ல்ஸ் மிச்செல் தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்கு ஹங்கேரி எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனின் பொருளாதாரம் பின்னடைந்துள்ளதுள்மையினால், உக்ரைனின் பொருளாதாரத்தை சீரமைக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் 9 பில்லியன் யூரோவை உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.