-மூதூர் நிருபர்-
திருகோணமலை பாலையூற்று பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை டோக்கியோ நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது வாகனச் சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
ரயில் வருவதைக் கண்டு வேன் சாரதி வாகனத்திலிருந்து இறங்கி உயிர்தப்பியுள்ளார்.
எனினும் வாகனம் ரயிலில் மோதுண்டு சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்