மாத்தறை தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த ரந்தோலி மஹா பெரஹரவின் போது யானை ஒன்று குழம்பியதில் பல பார்வையாளர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெவிநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
யானை குழப்பமடைந்ததில், பீதியில் ஓடிய மக்கள் தவறி விழுந்து காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களில் இருவர் மாத்திரம் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் ஆரம்ப சிகிச்சைக்குப் பின்னர் வெளியேறியதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
மீதமுள்ளவர்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தினர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்தனர்.
எவ்வாறாயினும், அதன் பின்னர் ரந்தோலி மகா பெரஹெரா வழமை போன்று பார்வையிடப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்