-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட துன்னாலை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அரச புலனாய்வாளர்களின் தகவலுக்கமைய நெல்லியடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கைணை முன்னெடுத்தனர்
நீதிமன்றால் உத்தரவிடப்பட்ட திறந்த பிடியாணைகள் (Open worrent), பிடியாணைகள் (worrent), சட்டவிரோத மதுபானமான கசிப்பு விற்பனையாளர்கள், மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 17 சந்தேகநபர்கள் இதன்போது கைது செய்யப்பட்னர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் பருத்திதுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
