இந்திய அணி இலங்கையில் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடுவதற்காக இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளது.
இந்தத் தொடர்களுக்கான இந்திய குழாமைத் தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில், இருபதுக்கு 20 அணியின் தலைவராக சூரியகுமார் யாதவை நியமிக்க அணித்தேர்வாளர்கள் அவதானம் செலுத்தி இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூரியகுமார் யாதவின் தலைமைத்துவம் குறித்து அணியின் வீரர்கள் சிறந்த பின்னூட்டங்களை வழங்கியிருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரில் யார் இருபதுக்கு 20 அணித் தலைவராகத் தெரிவு செய்யப்படுவார் என்ற விடயத்தில், அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீரின் முடிவு முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்