-பதுளை நிருபர்-
லுணுகலை வீதியில் 13 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
தெய்கிந்த கம பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை நகரில் இருந்து லுணுகலை பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிளும் லுணுகலை பகுதியிலிருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை பசறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


