கனடாவில் லா சேல் பகுதியில் மருந்தகம் ஒன்றிலிருந்து பெண் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி 2,100 டொலர்கள் பெறுமதியான வாசனை திரவியங்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
20 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை இவ்வாறு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருந்தகத்திற்குச் சென்ற குறித்த பெண் சில வாசனை திரவிய போத்தல்களை யாருக்கும் தெரியாமல் தனது கைப்பையில் போட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண்ணின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டு இவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் அது குறித்து அறிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.