கூகுள் நிறுவனம், தனது மொழிபெயர்ப்பு சேவையை மேம்படுத்தும் நோக்கில், ஹெட்ஃபோன்கள் (Headphones) வழியாக உண்மையான நேர மொழிபெயர்ப்புகளை (Real-time Translations) வழங்கும் புதிய ‘லைவ் ட்ரான்ஸ்லேட்’ (Live Translate) பீட்டா அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் டிரான்ஸ்லேட்(Google Translate) செயலி மூலம் இயங்கும் இந்த அம்சம், பேசுபவரின் தொனி மற்றும் உணர்ச்சிகளைத் தக்கவைத்துக்கொண்டு மொழிப்பெயர்ப்பை வழங்குவதால், உரையாடல்களைப் புரிந்துகொள்வது இலகுவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஹெட்ஃபோன்களைப் (Headphones) பயன்படுத்தி, செயலியின் ‘Live translate’ என்பதைத் தட்டுவதன் மூலம், வெளிநாட்டு உரைகள், திரைப்படங்கள் அல்லது உரையாடல்களை விரும்பிய மொழியில் உடனே கேட்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.
அத்துடன் இது தமிழ் உட்பட 70க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கின்றது.
தற்போது, இந்த பீட்டா அம்சம் அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் இந்தியாவில் உள்ள எண்ட்ரோய்ட் சாதனங்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சேவை 2026ஆம் ஆண்டில் iOS சாதனங்களுக்கும் ஏனைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.