மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவன் பேருந்தில் இருந்து தடுக்கி விழுந்து படு காயமடைந்ததாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் 2.15 மணி அளவில் மஸ்கெலியா நகரில் இருந்து அவிஸ்சாவலை நோக்கி செல்லும் பேருந்தில் இடம் பெற்றுள்ளது
மவுஸ்சாக்கலை தோட்டத்தில் வசிக்கும் கே.டி.தினித் என்ற பத்து வயது சிறுவனே மேலதிக வகுப்பு சென்று வீடு திரும்பும் போது மவுஸ்சாக்கலை சந்தியில் இறங்குகையில் தடுக்கி விழுந்து உள்ளார்.
இந்த மாணவன் கையில் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு உள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்