முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரின் மனைவியை தாக்கியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 37 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர், குறித்த பெண்ணிடம் எப்போதும் பணம் கேட்டு தகராறு செய்வதுடன் இதற்கு முன்னரும் பணத்துக்காக பெண்ணைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்