மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் தடிமன் மற்றும் சளி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 சிறுவர்களுக்கு ஏற்ப்பட்ட ஒவ்வாமை காரணமாக மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது அப்பிரதேச மக்களால் மிஹிந்தலை வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் குறித்த வைத்தியசாலைக்கு பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுவர்களின் நிலை குறித்து எவ்வித தகவலும் வெளியிட முடியாதென அதற்கு பொறுப்பான பேச்சாளர் தெரிவித்துள்ளமையானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்