திருகோணமலையில் விறகு வெட்டச் சென்ற பெண், மிருகங்களுக்காக வைத்த பொறியில் சிக்கி காயமடைந்துள்ளார்.
கும்புறுப்பிட்டி காட்டில் விறகு வெட்டச் சென்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கொச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிருகங்களுக்காக வைக்கப்பட்டிருந்த கொக்கி நாடாக்கள் கொண்ட பெட்டியை தாய் எடுத்து மகளுக்கு திறக்க கொடுத்ததாகவும், அதனை திறந்த போது வெடித்து சிதறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்