மாத்தறை-தலல்ல கடற்கரையில் போதைப்பொருட்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகள் அடங்கிய தொகுதியொன்று இன்று சனிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பொதிகளில் காணப்படும் பொருட்களின் தன்மை மற்றும் அவற்றின் அளவு தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த பொதிகளில் போதைப்பொருட்கள் உள்ளனவா என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.










