கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பின்போது, ஐந்து தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று வெள்ளிக்கிழமை மரைன் டிரைவ் பகுதியில் அமைந்துள்ள குறித்த நிலையத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, குறித்த நிலையத்தை நிர்வகித்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பெண்களும் 35 முதல் 43 வயதுக்கு இடைப்பட்ட தாய்லாந்து நாட்டுப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










