மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெலிஜ்ஜவில பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டினை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.