பொகவந்தலாவ மஹாஎலியா பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்தப் பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாணிக்கக்கல் அகழ்வதாக நுவரெலியா பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொகவந்தலாவ மற்றும் பலாங்கொட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரினால் இந்த மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்