-மஸ்கெலியா நிருபர்-
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மதிய வேளையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது வருகிறது.
இதன் காரணமாக சிவனொளி பாத மலை பகுதியில் உள்ள படிகளில் அதிக அளவில் மழை நீர் வருவதால் சிவனொளி பாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிக அளவில் சிவனொளி பாத மலைக்கு செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
அவ்வாறு செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக மலைக்கு செல்ல வேண்டும் இல்லாவிடின் மழை பெய்தது வரும் வேளையில் சிவனொளி பாத மலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.
அத்துடன் சிவனொளி பாத மலையில் ஆரம்பமாகும் சியத்த கங்குல ஓயா வில் மழை பெய்யும் வேலையில் நீராட வேண்டாம்.
தற்போது சியத்தகங்குல ஓயாவில் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
அனைவரும் பாதுகாப்பான முறையில் சிவனொளி பாத மலைக்கு சென்று வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.