நாட்டில் மரக்கறி விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு காய்கறிக்கும் 500 ரூபாய் வரை குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மெனிங் சந்தை நேற்று வெள்ளிக்கிழமை போயா தினமாக இருந்ததால் மூடப்பட்டிருந்ததாகவும், ஆனால் இன்று சனிக்கிழமை வணிக வளாகம் திறக்கப்படும் என்றும் தெரிவித்த அவர் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2000 முதல் 2500 ரூபாய் வரையில் இருந்த ஒரு கிலோ கரட் தற்போது 300 ரூபாயாக குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.