மன்னாரில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை

-மன்னார் நிருபர்-

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மன்னாரைச் சேர்ந்த 20 பேர் நேற்றைய தினம் புதன்கிழமை மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் வைத்து மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் யாத்திரை ஆரம்பிக்க உள்ளனர்.

மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி மண்டல பூஜையும் மதிய அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் திகதி மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை நோக்கி குறித்த 20 பேரும் யாத்திரை ஆரம்பிக்க உள்ளனர்.

20 ஆம் திகதி காலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைந்து தமது விரதத்தை பூர்த்தி செய்யவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்