மது போதையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் 37 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் – இப்பலோகம வளவுவேகம பாடசாலை அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு நண்பர்கள் மது விருந்தில் ஈடுபட்ட பொழுது இந்த கொலைச் சம்பவம் இடம் பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்