-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் மட்டுவில் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு அண்ணமார் ஆலயத்தின் அருகில் உள்ள நிலப்பரப்பை புதிதாக வாங்கியவர் மதம் மாறியதால், தனது வீட்டு வேலியோடு இருக்கும் அண்ணமார் ஆலயத்தினை அகற்றக்கோரி பிரதேச சபைக்கு அழுத்தம் கொடுத்ததை அடுத்து, கோவிலில் வழிபாட்டுக்கு தடைவிதிப்பதாக பிரதேச சபையால் ஊர் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரார் நேரடியாக சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் வீட்டிற்கு சென்று தமது மரபுசார் வழிபாட்டை மீட்டுத்தரும்படி வைத்த கோரிக்கையின் அடிப்படையில், மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் அண்ணமார் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.



