மட்டக்களப்பு – வாழைச்சேனையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் உட்பட மூன்று பேர் சேர்ந்து காட்டுப்பகுதியில் வேட்டையாட சென்ற போது இத் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் தற்செயலாக இடம் பெற்றதா அல்லது கொலையா என்பது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரோடு சென்ற மற்றைய இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அப்துல்காதர் இம்தியாஸ் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.