மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று சேதமடைந்துள்ளது.
குறித்த வீதியில் பயணித்த சிறிய பட்டா ரக வாகனம் அதே வீதியின் ஓரத்தில் ஆட்களற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை மோதியது
இதன் போது முச்சக்கரவண்டி பிரதான வீதியிலிருந்து தூக்கி வீசப்பட்டு அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் விழுந்து சேதமடைந்துள்ளது
விபத்து தொடர்பில் விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்,
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்