மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்றது.
செட்டிபாளையம் கட்டுப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி கதிர் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று நெற்கதிர்கள், செட்டிபாளையம் ஊடாக பண்பாட்டுப் பவனி ஊர்வலமாக குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தைச் சென்றடைந்தது. நெற்கதிர்களிலிருந்து பெறப்பட்ட நெல்லில் புத்தரிசி பெறப்பட்டு புதுப்பானையில் இட்டு பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.
குருக்கள்மடம் கிராம பொதுமக்கள், மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
தமிழ் தாய் வாழ்த்து, இசைவாத்திய ஆற்றுகை, கிராமியநடனம், நாட்டார் நடனம், கழவர் நடனம், ஒயிலாட்டம், நாட்டார் பாடல், கவியரங்கம், என்னபன ஆற்றுகை செய்யப்பட்டதோடு, கிராமிய விளையாட்டுக்களும் இடம்பெற்று நிகழ்ச்சிகளில் பற்கேற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்கள், கலைஞர்கள், உள்ளிட்ட பலரும் பற்கேற்றிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்