மட்டக்களப்பு-கருவாச்சிகுடியில் மக்கள் வங்கி முன்பதாக பிரதான வீதியில் அமைந்துள்ள முச்சந்தியில் வீதி சமிக்ஞை விளக்கு அமைப்பதற்காக அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது
இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று சனிக்கிழமை மாலை 4.00மணி அளவில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்த்தன கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்கள உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கிராமிய மத தலைவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
