மட்டக்களப்பில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்து
பூநொச்சிமுனை பச்சை வீட்டுத்திட்டம் என்னும் குடியேற்ற கிராமத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
வீட்டின் அறையொன்றில் பாரிய சத்தத்துடன் குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது, எனினும் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்