மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் பகுதியில் வகுப்பில் மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து ஆசிரியர் ஒருவர் நேற்று புதன் கிழமை உயிரிழந்துள்ளார்.
தம்பலவத்தையை பிறப்பிடமாகவும், களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட பட்டிருப்பு கல்வி வலயத்தில் மட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக கடமையாற்றிய அருணாசலம் ஆனந்தராசா (வயது – 52) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
குறித்த ஆசிரியர் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருந்த வேளையில் மாரடைப்பு காரணமாக திடீரென மயக்கமுற்ற நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்