கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 2 சிற்றுண்டிச்சாலைகளை தற்காலிகமாக 14 நாட்களுக்கு பூட்டுமாறு, ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த சிற்றுண்டிசாலைகளுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்களுக்கு தற்காலிகமாக பூட்டுமாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சிற்றுண்டிசாலைகளை செங்கலடி சுகாதார அதிகாரிகள் பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்று பார்வையிட்டு, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பலமுறை அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த சிற்றுண்டிசாலைகள் அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாது, அவற்றை பின்பற்றாது, தொடர்ந்தும் இயங்கியதையடுத்து இவ்வாறு சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.










