மகளிருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நேபாளம் மகளிர் அணிக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து 179 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய நேபாளம் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்