ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த Azur Air விமானம், வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மொஸ்கோவிலிருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, விமானம் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உஸ்பெகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த மற்றுமொரு விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திசைதிருப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.










