குருணாகல் பகுதியில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்துள்ளார்.
பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ பிரசன்ன மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த 70 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சந்திரா பியசிலியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சஞ்சீவ கடந்த 15ஆம் திகதி மாலை திடீரென மாரடைப்பு காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியை வீட்டிற்கு தெரிவிக்கும் போது தாய் சந்திரா பியாசிலி நெஞ்சு வலிப்பதாக கூறி தரையில் சாய்ந்துள்ளார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், எனினும் சில மணிநேரங்களில் அவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்