பொலன்னறுவை தேசிய கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
திறமையான துடுப்பாட்ட வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இலங்கை கிரிக்கெட் சபையஜன’ ‘தேசிய அபிவிருத்தி பாதை’ திட்டத்தின் கீழ் இந்த புதிய மைதானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சுற்றுலா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடமத்திய மாகாணத்தில் தேசிய மைதானம் ஒன்றின் நீண்டகால தேவையை நிவர்த்தி செய்யும் இந்த மைதானத்தின் நிர்மாணத்திற்காக இலங்கை கிரிக்கெட் சபை மொத்தமாக 170 மில்லியன் செலவிட்டுள்ளது.
பொலன்னறுவை, ஹிகுராக்கொடையில் 45 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மைதானம், 10 புல் கீற்றுகள் மற்றும் பிரதான புல்வெளியைச் சுற்றி 80 மீற்றர் எல்லையைக் கொண்டுள்ளது.
அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் பொலன்னறுவை தேசிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி வட மத்திய மாகாண கிரிக்கெட் சங்கத்தின் கீழ் வீரர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த உதவும்.
மேலும், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையிலான ‘விளையாட்டை கிராமத்திற்கு எடுத்துச் செல்லும்’ முயற்சியின் ஒரு பகுதியாக, கிராமப்புற வீரர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், 12 பாடசாலைகள் மற்றும் 10 விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்