தங்காலை நகரில் கஜமுத்து, மாணிக்க கற்கள் மற்றும் பழைய நாணயங்கள் போன்ற பெறுமதி வாய்ந்த பொருட்களை எடுத்துச் சென்ற மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி நாகொட பிரதேசத்தை சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடையவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 சிறிய மாணிக்க கற்கள் மற்றும், ஒரு கஜமுத்து, 263 பழைய நாணயங்கள் இதன் போது சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளுக்காக தங்காலை நகருக்கு வந்து அங்கு சுற்றித் திரிந்த போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்