-கிண்ணியா நிருபர்-
திருக்கோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவர்களது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு மூதூர் கோட்டத்தில் உள்ள இருதய புரம், குச்சவெளி கோட்டத்தில் உள்ள கும்புறுபிட்டி, நாவற் சோலை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொன்றும் தலா 1930 ரூபா விலையான ஆற்றல் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல்கள் இன்று வெள்ளிக்கிழமை திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் வழங்கப்பட்டது.
இந்நூல்களை திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவரும் திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கதிரவேலு சண்முகம் குகதாசன் வழங்கி வைத்தார்.
இவ் நிகழ்வில் கனடா திருகோணமலை நலன்புரி சங்கப் பொருளாளர் இலக்ஷ்ம வாசன் இலக்ஷம பெருமாள் மற்றும் திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்க செயலாளர் கணபதிப் பிள்ளை சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
