அநுராதபுரம் ருவன்வெலிசாய அருகில் பிக்குகள் முன்னெடுத்த போராட்டத்துடன் தொடர்புடைய மோதலைத் தொடர்ந்து தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜாங்கனே சத்தரதன தேரர், தலையில் 14 தையல்களுடன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ள அவர், தனது உயிருக்கு இன்னமும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள தேரர், மீண்டும் ஏதேனும் குழப்பநிலை ஏற்பட்டால் அநுராதபுரத்திற்குத் திரும்புவேன் எனவும் எச்சரித்துள்ளார்.
தனது சிகிச்சையின்போது உதவிய மருத்துவப் பணியாளர்கள், பொலிஸார், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொதுமக்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.










