தொடுவாவ பொலிஸார், நேற்று வியாழக்கிழமை இரவு தலவில வெல்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத பீடி இலைகளுடன் நான்கு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது, 799 கிலோகிராம் 900 கிராம் எடையுடைய பீடி இலைகள் அடங்கிய 22 பொதிகள், ஒரு படகு மற்றும் ஒரு லொறி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடுவாவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடுவாவ, இரணவில மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த 27, 47, 53 மற்றும் 63 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் இருவர் நேரடியாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலும், ஏனைய இருவர் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட 797 கிலோகிராம் 300 கிராம் எடையுடைய பீடி இலைகள் அடங்கிய மேலும் 20 பொதிகளை கடலோரக் காவல்படை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அவை பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை தொடுவாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










